நினைவிருக்கிறதா?

நான் மறந்து போன பிறந்த நாளுக்கு
நீ அனுப்பிய வாழ்த்து மடல்
நினைவிருக்கிறதா?
இரத்தத்தில் நீ தொட்டு எழுதிய கடிதங்கள்
நினைவிருக்கிறதா?
ஒரு விழாவில் அதோ அவர் தான் என்று
கண்களாளேயே உன் தோழிகளுக்கு
என்னை அடையாளம் காட்டினாயே
நினைவிருக்கிறதா?
நான் முத்தம் கேட்ட போதெல்லாம் அவிய இருக்காக இவிய இருக்காக என்று சொல்லிவிட்டு
என் கவிதைக்கு முதல் பரிசு ஒரு முறை கிடைத்தபோது
நீயே வந்து உன் இதழால்
என் இதழ் ஒரத்தில் காயப்படுத்தினாயே
நினைவிருக்கிறதா?
என்னிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று நீ கேட்டதற்கு
நான் சொன்ன பதிலைக் கேட்ட பிறகு
என்னை கடந்து செல்லும் போது
புத்தகம்,கைகள்,பாத்திரம் என்று மறைத்து கொள்வாயே
நினைவிருக்கிறதா?
உன் அக்கா திருமணத்தில் அடுத்த கல்யாணம் உனக்குத் தான் என்று
சொன்ன போது
ஏனோ கள்ளத்தனமாக என்னை ஒரக் கண்ணால் பார்த்தாயே
நினைவிருக்கிறதா?
Astrology.com-ல் என்னுடைய ராசிக்கு நீயும்
உன்னுடைய ராசிக்கு நானும் பலன்கள் பார்த்து விட்டு
e-mail அனுப்பிக் கொள்வோமே
நினைவிருக்கிறதா?
இவை எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது
நிழலாக அல்ல வடுவாக!!!!!


2 Comments:
This comment has been removed by the author.
Hi,
Really nice!
silla nimidam yennai sinthkka vaithuvittu.....
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home